எமபயம் நீக்கும் அற்புத தலம் - ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில்

Guru

அருள்மிகு மங்கள நாயகி அம்மன் சமேத வாஞ்சி நாதர் திருக்கோயில்

Arulmigu Mangala Nayaki Amman Sametha Vanchinathar Temple

ஆயுள் விருத்தி ஸ்தலம் | தேவாரம் பாடல் பெற்ற தலம் | எமபயம் நீக்கும் அற்புத தலம் 🛕திருவாஞ்சியம் 📍திருவாரூர் மாவட்டம்

📜 ஆலய மகிமை

🙏 இங்கு வந்தால் தீரும் பிரச்சனைகள் (நன்மைகள்)
✨ எம பயம் & ஆயுள் தோஷம் ஆயுள் விருத்தி அடைதல், மரண பயம் மற்றும் நோய் நொடிகள் நீங்குதல்.
✨ பித்ரு தோஷ நிவர்த்தி முன்னோர் சாபம், பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டாதல்.
✨ நவகிரக & சனி தோஷங்கள் ஏழரை சனி, சனி தசா புத்தி பாதிப்புகள் மற்றும் ராகு-கேது தோஷங்கள் விலகுதல்.
✨ மன அழுத்தம் & பதற்றம் காரணமற்ற பயம், மனக்கவலை, மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறுதல்.
✨ திருமணத் தடை & குடும்ப ஒற்றுமை திருமணத் தடைகள் விலகுதல் மற்றும் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படுதல்.
✨ பூர்வ ஜென்ம பாவங்கள் பூர்வ ஜென்ம பாவங்கள் மற்றும் அறியாமல் செய்த பாவங்கள் அகலுதல்.

காவிரிஆற்றின் கரையில் காசிக்கு (வாரணாசி) நிகராகவும், மிகவும் புண்ணிய ஸ்தலங்களாகவும் கருதப்படும் ஆறு தலங்களில் ஸ்ரீவாஞ்சியமும் ஒன்றாகும். திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், மாயூரம், சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம்.

இத்தலத்தின் சிறப்பு வேறு பெயர்கள்: ஸ்ரீவாஞ்சியம்தலம் காந்தாரண்யம், தபோவனம், ராஜகம்பீர சதுர்வேதி மங்கலம், பூகைலாயத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

சைவத் திருமுறைகள்

இக்கோவிலின் மூலவரான வாஞ்சிநாதசுவாமி ஒரு சுயம்பு லிங்கம் ஆவார். மேலும் இது உலகில் உள்ள 64 சுயம்பு லிங்கங்களில் மிகப்பழமையானது.

வாஞ்சிநாதசுவாமியை சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தமிழ்திருமுறைகளில் பாடியுள்ளனர்.

தேவர்களும் எமதர்மராஜனும் பெற்ற அருள்

பிரமன், திருமால், சூரியபகவான், எமதர்மராஜா, சப்தரிஷிகள், அக்கினி பகவான், தேவர்கள் முதலினோர், சிவனருள் பெற்ற தலம்.

எமனின் சிவ வாகனம் & காசிக்கு நிகரான பலன்

எமனுக்குபாவ விமோசனம் கொடுத்த ஸ்ரீ வாஞ்சியம் மறுபிறவிஇல்லாத நிலையை தரும் ஸ்தலம். ஒருமுறை இந்த தலத்திற்கு வருவது நூறு முறை காசிக்கு சென்று வருவதற்கு சமம். ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் அவர் சிவபெருமானின் வாகனமாகஅமைந்துுள்ளார்.

🛕 முக்கிய சந்நிதிகள் & பரிவார சந்நிதிகள்

சுவாமி சன்னதி (மூலவர்)

மூலவர் நாமம்: அருள்மிகு வாஞ்சிநாதர்.

வேண்டுதலுக்கு ஏற்பப் பிரார்த்தனை, அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்துகொள்ளலாம்.

அம்பாள் சன்னதி

அம்பாள் நாமம்: அருள்மிகு மங்கள நாயகி அம்மன்.

தமிழ்ப்பெயர்: மருவார்குழலி

இங்குள்ளமங்களநாயகி அம்மனுக்கு தனிச் சந்நிதி உள்ளது. பார்வதி தேவி தானே விரும்பிவாழவந்த நாயகியாக உறையும் தலம்.

வேண்டுதலுக்கு ஏற்பப் பிரார்த்தனை, அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்துகொள்ளலாம்.

🌱 இக்கோவிலின் தல விருட்சம் சந்தன மரமாகும்.
திருக்குளம்

இக்கோவிலில் 'குப்தகங்கை' என்ற புனித தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. கங்கா தேவி 999 கலைகளுடன் இங்குள்ள திருக்குளத்தில் ரகசியமாக உறையும் தலம்.

எமதர்மராஜா - சித்திரகுப்தர் சன்னதி

இந்ததிருத்தலத்தில் எமனுக்கு தனிச்சன்னதியாக அவருடன் சித்திர குப்தரும் கணக்குப்பிள்ளையாக அமைந்துள்ளார். இதனால் கண்ட தோஷம், ஆயுள்விருத்தி, பிதுர்தோஷம், பூர்வ ஜென்ம பாவம், மற்றும் நோய்நொடிகள் மற்றும் அனைத்து பரிகார தோஷங்களும் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

மகிஷாசுரமர்த்தினி (தனிச்சந்நிதி)

எருமைக்கடாமுகம் உடைய மகிஷாசுரன் என்றஅரக்கன் இழைத்த கொடுமைகளைப் பொறுக்கமுடியாத தேவர்கள் எட்டுக்கைகளை உடைய துர்க்கையிடம் முறையிடஅவள்கள் பால் கருணைகொண்ட துர்க்கை சோனைமலை சென்று குகையில் இருந்த மகிஷனை கொம்பு பற்றி திருவாஞ்சியத்திற்கு இழுத்துவந்து அருகில் போட்டு தலை இடையில் (கழுத்து)காலால் உதைத்து சூலத்தால் குத்தி வதம் செய்து தேவர்களுக்குஅருள் பாலித்த திருத்தலம்.

ராகு கேது

இங்கு இராகு மற்றும் கேது ஆகிய இருகிரகங்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.ராகு, கேது கிரக பரிகாரபிரார்த்தனைகள் செய்யப்படுகின்றது.

சனிபகவான்

சனி பகவான் பரிவார சந்நிதியில் இருக்கிறார். இங்கு அவரை வணங்கும்போது ஏழரை சனி, சனி தசா, புக்தி பாதிப்புகளில் இருந்து விடுபடுவதாக நம்பிக்கை.

யோக பைரவர்

இங்குள்ள பைரவர் யோக நிலையில் எழுந்தருளியுள்ளார்.

ஆலயச்சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் மற்ற சந்நிதிகள்:
  • ✔ குளக்கரை விநாயகர்
  • ✔ அபயங்கர விநாயகர் சன்னதி
  • ✔ பாலமுருகன் சன்னதி
  • ✔ நட்டுவன விநாயகர் சன்னதி
  • ✔ சுப்பிரமணியர் சன்னதி
  • ✔ சண்டிகேஸ்வர சன்னதி
  • ✔ நடராஜர் சன்னதி
  • ✔ இராகு - கேது சன்னதி
  • ✔ சனி பகவான் சன்னதி
  • ✔ யோக பைரவர் சன்னதி

🙏 சிறப்புப் பரிகாரங்கள் & தீப முறைகள்

பித்ரு தோஷ நிவர்த்தி & மோட்சதீபம்

பித்ரு தோஷ நிவர்த்தி

முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அல்லது பித்ரு சாபத்தால் குடும்பத் தகராறுகளால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை செய்வது உடனடி மன அமைதியைத் தரும்.

மோட்சதீபம்

இறந்த நம் முன்னோர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம், இந்தத் திருக்கோயிலில் ஏற்றப்படுகின்றது - ₹300

எமதர்மராஜா - சித்திரகுப்தர் பரிகார வழிபாட்டு முறைகள்
பரிகார வழிபாட்டு படிகள்:

படி 1: முதலில் குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடவும் அல்லது முகம், கை, கால்களை நனைத்துக் கொள்ளவும்.

படி 2: பிறகு குளக்கரையில் அமைந்திருக்கும் குளக்கரை விநாயகரை தரிசித்து வேண்டி.

படி 3: அடுத்து எமதர்மராஜன் சன்னதிக்குச் சென்று பரிகாரத்திற்கேற்ப அல்லது வயதுக்கு ஒன்று என்கின்ற கணக்கில் ஆயுள் விருத்தி தீபம் ஏற்றி, அர்ச்சனை, அபிஷேகம், செய்து வழிபடவும். பிறகு ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமியை வழிபடச் செல்லவும்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் நல்லெண்ணெய்(ஒரு தீபம் ₹10) மற்றும் நெய் தீபங்கள் விற்கப்படுகின்றன.

தீப விபரங்கள்:

தீபத்தின் பெயர் எண்ணிக்கை
கணபதி தீபம்5 தீபம்
எமதர்மருக்கு ஆயுள் விருத்தி தீபம்வயதிற்கு ஒன்று
சித்திரகுப்தருக்கு9 தீபம்
பரிகார மண்டல தீபம்48 தீபம்
ஸ்ரீவாஞ்சிநாதர், மங்களாம்பிகை தாயார்5 தீபம்
திருமணத்தடை நீங்க (ராகு கேது)11 தீபம்
யோகபைரவர் (பைரவ உபாதைகள் நீங்க)5 தீபம்
சன்னதி தீபம்21 தீபம்
சுற்றுக்கோயில் தீபம்31 தீபம்
தாமரைதண்டு திரி தீபம்5 தீபம்
நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய் தீபம் (பரிகாரத்திற்கு)11 தீபம்
மகிஷாசுரமர்த்தினி - நவகிரக தோஷ பரிகாரங்கள்

பரிகாரங்கள்:

அம்பாளைபிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு இராகு காலங்களில் தரிசனம் செய்து வழிபட சகலவித நவகிரக தோஷங்களும் விலகி நன்மை ஏற்படும்.


ஸ்ரீமகிஷாசுரமர்த்தனியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

சனிபகவான்

இங்குள்ள சனி பகவானை ஆனிமாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் குப்தகங்கையில் நீராடி இவரது நாமங்களை உச்சரித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை ஆராதனை செய்தால், சனி பகவானின் அனைத்து உபாதையிலிருந்து விடுபடலாம்.

⏰ தரிசன நேரம், கட்டண விபரங்கள் & தொடர்பு

தரிசன நேரம்
🕐 காலை நேரம்
05:30 AM - 12:30 PM
🕐 மாலை நேரம்
04:00 PM - 08:30 PM
கட்டண விவரங்கள் (Ticket Charges)
கட்டண சேவை (Tamil) Ticket Details (English) கட்டணம் (Price)
அர்ச்சனை டிக்கெட்Archanai ticket₹10/-
மோட்ச தீபம்Motcha Deepam₹300/-
அபிஷேகம்Abishegam₹1,000/-
நித்திய கட்டளைNithiya Kattalai₹5,001/-
மாதாந்திர அர்ச்சனைMonthly Archanai₹1,200/-
ஆயுஷ்ஹோமம்Ayush Homam₹10,000/-
சஹஸ்ரநாம அர்ச்சனைSahasranama Archanai₹3,000/-

* 18 ஜூலை 2026 அன்றைய விலை விவரம் (Price as on 18th july 2026)

அதிகாரப்பூர்வத் தொடர்பு விபரங்கள் (Contact Details)


🏛 திருக்கோயில்: அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், திருவாஞ்சியம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.


📞 தொலைபேசி எண்: 04366 - 212365, 7708251161


📧 மின்னஞ்சல் முகவரி (Email): eosrivanjium@gmail.com


📍 கூகுள் மேப் வழித்தடம் (Google Maps)

🗺️ பயண வழிகாட்டி & பேருந்து வழித்தடங்கள்

🚌 பேருந்து வழித்தடங்கள் / Bus Routes

📍 1. மயிலாடுதுறையிலிருந்து (From Mayiladuthurai)

மயிலாடுதுறை (Mayiladuthurai) ➜ சன்னநல்லூர் (Sannanallur) ➜ அச்சுதமங்கலம் (Achuthamangalam) ➜ ஸ்ரீவாஞ்சியம் (Srivanjiyam)

குறிப்பு / Note: அச்சுதமங்கலத்தில் இறங்கவும். (Get down at Achuthamangalam.)

📍 2. கும்பகோணத்திலிருந்து (From Kumbakonam)

கும்பகோணம் (Kumbakonam) ➜ அச்சுதமங்கலம் (Achuthamangalam) ➜ ஸ்ரீவாஞ்சியம் (Srivanjiyam)

குறிப்பு / Note: அச்சுதமங்கலத்தில் இறங்கவும். (Get down at Achuthamangalam.)

📍 3. திருவாரூரிலிருந்து (From Thiruvarur)

திருவாரூர் (Thiruvarur) ➜ அச்சுதமங்கலம் (Achuthamangalam) ➜ ஸ்ரீவாஞ்சியம் (Srivanjiyam)

குறிப்பு / Note: எளிதில் பேருந்துகள் கிடைக்கும். (Frequent buses available.)

🚚 உள்ளூர்ப் போக்குவரத்து & குறிப்புகள் / Local Transport & Tips

🚌 பேருந்து நிறுத்தம் (Main Bus Stop)

ஸ்ரீவாஞ்சியம் கோயிலுக்குச் செல்ல அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதே சிறந்தது.

Achuthamangalam is the main and recommended bus stop to get down for the temple.

🛺 ஆட்டோ வசதி & கட்டணம் (Auto & Fare)

அச்சுதமங்கலத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் உள்ளன.
கட்டணம்: ₹50 - ₹70

Autos are readily available from Achuthamangalam to the temple entrance.
Fare: ₹50 - ₹70

🛕 அருகில் அமைந்துள்ள முக்கிய கோயில்கள்

அச்சுதமங்கலம் தொன்மையான சிவவாலயம்

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோவிலுக்கு மிக அருகிலேயே, அச்சுதமங்கலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொன்மையான ஆலயம் இருக்கிறது.

இந்திரன் வழிபட்ட சக்திவாய்ந்த தலம்

இங்குள்ள சிவலிங்கம், இந்திரலோகத்தின் அதிபதியான தேவேந்திரனாலேயே நிறுவப்பட்டு வழிபடப்பட்ட அதிசயம் கொண்டது! இந்த ஆலயம் மிகவும் சக்திவாய்ந்தது மட்டுமன்றி, வேறு எங்கும் காண்பதற்கரிய மிக வித்தியாசமான கோஷ்டமூர்த்திகளையும் கொண்டுள்ளது.

ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்திலிருந்து வெறும் 2.5 கி.மீ தொலைவிலும், அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெறும் 400 மீட்டரிலும் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்திற்கு மக்கள் கண்டிப்பாகச் சென்று தரிசிக்க வேண்டும்! அங்கே காலடி எடுத்து வைத்ததுமே ஒரு தெய்வீக அமைதியும், நெஞ்சை நெகிழ வைக்கும் ஒருவித புதுவித உணர்வும் நம்மை ஆட்கொள்வது நிஜம்!

🐍 மெய்சிலிர்க்க வைக்கும் நாகச்சட்டை அற்புதம்!

அதுமட்டுமா... சமீபத்தில் இங்கே ஒரு சிலிர்க்க வைக்கும் அற்புதம் நிகழ்ந்துள்ளது! 24.12.2025 மார்கழி 9-ஆம் நாள் காலசந்தி பூஜையின் போது சிவலிங்கத்தின் மீது ஒரு நாகம் சட்டையை உரித்துச் சென்றிருக்கிறது! இந்த மெய்சிலிர்க்க வைக்கும் அதிசய நிகழ்வின் ஆதாரமாக, அந்த நாகச்சட்டையைக் கண்ணாடிச் சட்டமிட்டு (Frame) பக்தர்கள் பார்வைக்காகத் திருக்கோவிலில் வைத்திருக்கிறார்கள்.

அற்புதமான அந்தச் சிவத்தலத்திற்கும் சென்று தரிசித்து நற்பலன் பெறுங்கள்; மேலும் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

❓ அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (FAQ)

❓ தங்கும் வசதி உள்ளதா?

➡ ஆம், கோயிலுக்கு எதிரில் கழிப்பறை வசதியுடன் கூடிய தமிழ் நாடு அரசு சுற்றுலாப்பயணிகள் / பக்தர்கள் தங்கும் விடுதி (Pilgrim's rest shed) உள்ளது.

❓ உணவகங்கள் உள்ளனவா?

➡ ஆம், தங்கும் விடுதிக்கு அருகில் தூய சைவ உணவகம் (பிராமண போஜன சாலை) உள்ளது. Sri Mangalambikai Mess ( ph - 9842755073, 9842755076 ) (இந்த மெஸ்ஸில் குழுவாகவோ அல்லது கூட்டமாகவோ வருபவர்களுக்கும் உணவு தயார் செய்து தருவார்கள்).

❓ தனியார் தங்குமிடங்கள் (Private Stays) உள்ளனவா?

➡ ஆம், கோயிலுக்கு அருகிலேயே ஒரு சில தனியார் விடுதிகள் மற்றும் ஒரு திருமண மண்டபத்தில் ஏசி / ஏசி இல்லாத அறைகள் கிடைக்கின்றன. நன்னிலம் மற்றும் சன்னநல்லூரிலும் தங்கும் விடுதிகள் உள்ளன.

📝 ஸ்ரீவாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - எனது பயண அனுபவம்

(பயணத்தேதி: 18 ஜூலை 2026)

1. கோயில் சூழல் & வசதிகள்

கிராமப்புறச் சூழல்: இத்திருத்தலம் அமைதியான ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் சுற்றுப்புறமும், அருகிலுள்ள ஆறும் வறண்டு காணப்படுகின்றன.

தீர்த்தக் குளம்: திருக்கோயிலின் உள்ளே உள்ள புனித 'குப்த கங்கை' தீர்த்தக் குளத்திலும் தற்போது நீர் வற்றியுள்ளது. இருப்பினும், பக்தர்கள் முகம் மற்றும் கை, கால்களைக் கழுவிக்கொள்வதற்குத் தொட்டி (Water Tank) வசதி செய்யப்பட்டுள்ளது.

2. மனஅமைதியும் ஆன்மீக உணர்வும்

தெய்வீக அழைப்பு: கடந்த சில நாட்களாகக் காரணமே இல்லாமல் எனக்குள் ஒருவித மனப்பதற்றமும் கவலையும் (Anxiety) இருந்து வந்தது. ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமியின் அருள் அலைகளால் (Intuition) இக்கோயிலுக்கு வரக்கூடிய வாய்ப்பு அமைந்தது.

பதற்றம் நீங்கிய நிம்மதி: கோயிலுக்குள் அடியெடுத்து வைத்த உடனே என் மனதில் இருந்த அத்தனை பதற்றங்களும், கவலைகளும் சுவடே தெரியாமல் மறைந்துவிட்டன. மனம் மிகவும் அமைதியாகவும், மனநிறைவாகவும் மாறியது.

நிச்சயம் செல்ல வேண்டிய தலம்: மனக்கவலை, மன அழுத்தம் அல்லது பதற்றத்தால் அவதிப்படுபவர்கள் அனைவரும் தவறாமல் வந்து தரிசிக்க வேண்டிய அற்புதத் திருத்தலம் இது.

3. வழிபாடும் உணவும்

தரிசனம்: திருக்கோயிலில் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைவரையும் மிகச் சிறப்பாகத் தரிசனம் செய்தேன்.

சாத்விக உணவு: தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அருகிலுள்ள 'ஸ்ரீ மங்களாம்பிகை மெஸ்' (பிராமண போஜன சாலை) உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டேன்.

4. பயணத்தொடர்ச்சி

காலை உணவிற்குப் பிறகு, ஆட்டோ மூலமாக அச்சுதமங்கலம் சென்று அங்கிருந்து அடுத்த திருத்தலத்திற்குப் புறப்பட்டேன்.

இந்த ஒரே நாளில் மொத்தம் 7 பெரிய பழமையான கோயில்களைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அவற்றைப் பற்றிய விவரங்களை எனது அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்!

✨ உங்களுடைய அனுபவங்களைப் பகிருங்கள்! (Share Your Experience)

நீங்கள் ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சென்றுள்ளீர்களா? அங்கு உங்களின் அனுபவம் எப்படி இருந்தது? அல்லது விரைவில் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா?

கீழே உள்ள Comment Box-ல் உங்கள் எண்ணங்களையும், இந்தத் திருத்தலம் பற்றிய உங்களின் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுடைய அனுபவம் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையலாம்! 👇

Keywords / தேடல் சொற்கள்

Sri Vanchiyam, Vanchinathar Temple, Yama Dharma Temple, Pithru Dosham, Siva Temple, Kumbakonam Temples, Mangalambigai, Gupta Ganga, Tamil Nadu Temples, Spiritual Journey, Navagraha Parikaram, Rahu Ketu Dosham, Sani Bhagavan, Ayush Homam, Kanda Dosham, Yamabhayam Neekkum Sthalam, Aayul Viruthi Sthalam, Devaram Paadal Petra Thalam, Yama Dharma Raja Temple, Chitragupta Sannidhi, Mahishasuramardini, Yoga Bhairavar, Rahu Ketu Single Stone, Abayangara Vinayagar, Pitru Dosha Nivarani, Pithru Tharpanam, Motcha Deepam, Aayul Viruthi Deepam, Rahu Ketu Pariharam, Srivanchiyam Temple Ticket Charges, Anxiety Relief Temple, Mental Peace Spiritual Spots.

ஸ்ரீவாஞ்சியம், வாஞ்சிநாதர், எமதர்மராஜா, பித்ரு தோஷம், சிவாலயம், கும்பகோணம் கோயில்கள், மங்களாம்பிகை, குப்தகங்கை, தமிழ்நாடு கோயில்கள், ஆன்மீக பயணம், நவகிரக பரிகாரம், ராகு கேது தோஷம், சனி பகவான், ஆயுள் விருத்தி, கண்ட தோஷம், ஆயுள்விருத்தி ஸ்தலம், தேவாரம் பாடல் பெற்ற தலம், எமபயம் நீக்கும் தலம், குப்தகங்கை தீர்த்தம், தல விருட்சம் சந்தன மரம், சுயம்பு லிங்கம், காசிக்கு நிகரான தலம், எமதர்மராஜா சந்நிதி, சித்திரகுப்தர், மகிஷாசுரமர்த்தினி, யோக பைரவர், இராகு கேது, மருவார்குழலி, பரிவார தெய்வங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, மோட்ச தீபம், ஆயுள் விருத்தி தீபம், ராகு கேது தோஷ நிவர்த்தி, ஆயுஷ் ஹோமம், பரிகார தீபம், அர்ச்சனை சீட்டு, மன அமைதி தரும் தலம், மனப்பதற்றம் நீங்க பரிகாரம்.

📸 புகைப்படங்கள் (Photos)

திருக்கோயில் படங்கள்
Srivanjiyam Temple Outer View Srivanjiyam Temple Sivan Parvathi