நவகிரகங்களின் கதிர்வீச்சு மற்றும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், தற்காத்துக் கொள்ள புண்ணியங்களைச் சேர்ப்பது அவசியம்.
- நவதானிய தீப வழிபாடு: நவதானியங்களை மாவாக்கி, சிவாலயங்களுக்கு வெளியே அந்தப் பொடியைப் பரப்பி அதன் மேல் தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். இது கர்ம வினைகளைக் குறைக்கும்.
- கோ சேவை: சிவராத்திரி வரை தினமும் பசுக்களுக்கு அகத்திக்கீரை, வெல்லம்,வாழைப்பழம் மற்றும் புல் கட்டுகளை வழங்கி வணங்க வேண்டும்.
- திருவாசகப் பாராயணம்: தினமும் மாலை வேளையில் இல்லத்தில் தீபமேற்றி, திருவாசகத்தில் ஏதேனும் ஒரு பதிகத்தை ஓதி,அதன் பின் இனிப்புகளைத் தானமாக வழங்க வேண்டும்.
- பசுக்களுக்கு அன்னம்: பகல் வேளையில் கோசாலைகளுக்குச் சென்றோ அல்லது தெருவில் தென்படும் பசுக்களுக்கோ அகத்திக்கீரை மற்றும் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்.
சிவராத்திரி முழுவதும் கண்விழித்து நான்கு கால பூஜைகளைத் தரிசிக்கும் பக்தர்களுக்கும்,முற்றோதுதல் செய்யும் சிவனடியார்களுக்கும் பணிவிடை செய்வது கோடி புண்ணியம் தரும்.
- மூலிகை தேநீர்: துளசி,இஞ்சி,எலுமிச்சை,கருப்பட்டி,சுக்கு,கொத்தமல்லி விதை மற்றும் மிளகு சேர்த்த சுக்கு காபி/தேநீர் வழங்க வேண்டும்.
- உணவு: விரதம் இருப்பவர்களுக்குப் பால் மற்றும் பழங்களையும்,மற்றவர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம்.
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம்: அர்ச்சனை செய்யப் பரிசுத்தமான வில்வ இலைகளைப் பறித்துக் கொடுக்க வேண்டும். இது தீராத சாபங்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது.
- நால்வர் துதி: அப்பர்,சுந்தரர்,சம்பந்தர்,மாணிக்கவாசகர் ஆகியோரின் தேவார, திருவாசகப் பதிகங்களை ஓதுதல் வேண்டும்.குறிப்பாக சிவபுராணம் பாராயணம் செய்வது சிறப்பு.
- நாம ஜெபம்: மனதினுள் இடைவிடாது "ஓம் நமசிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- வீட்டில் வழிபடுவோர்: ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள்,இல்லத்தில் தங்களால் இயன்ற அளவு விளக்குகளை ஏற்றி, அந்த தீப ஜோதியில் ஈசனையும் அன்னை பார்வதியையும் கண்டு தரிசிக்க வேண்டும்.
- எள் சாதப் பரிகாரம்: சிவராத்திரிக்கு மறுநாள் காலை, எள் கலந்த சோற்றினை (எள் சாதம்) ஏதேனும் ஒரு புண்ணிய நதியில் கரைத்து,பின் அத்தீர்த்தத்தில் மூழ்கிக் குளிக்க வேண்டும்.
- உடல் நலக் காப்பு: அன்று முதல் தினமும் வெறும் வயிற்றில் துளசி, வில்வம் மற்றும் அருகம்புல் ஆகியவற்றைச் சிறிதளவு உட்கொள்ள வேண்டும்.இது வரும் காலத்தில் ஏற்படும் நவகிரகக் கதிர்வீச்சுத் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
- பித்ரு கடன்: சிவராத்திரிக்கு அடுத்து வரும் அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.
- அன்னதானம்: அனாதை இல்லங்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருப்பவர்களைத் தன் முன்னோர்களாகவே கருதி அவர்களுக்கு அன்னதானம் செய்து ஆசி பெற வேண்டும்.
- காசி மாநகரம்: காசி என்பது அன்னை லோபமுத்ராவின் கோட்டை. மகா சிவராத்திரி அன்று ஈசன் தனது பயணத்தைக் காசியில் இருந்தே தொடங்குகிறார்.
- திருவண்ணாமலை: சிவராத்திரி அன்று அண்ணாமலையில் ஈசனே நேரடியாக வலம் வருகிறார்.பிரதோஷ காலங்களில் சித்தர்கள் அங்கே கிரிவலம் வருகிறார்கள்.கர்ம வினைகளைப் போக்க இதுவே தலைசிறந்த தலம்.
அடுத்த கட்டத்தைப் பற்றி குழப்பமா?
தெளிவு பெற எமது ஆன்மீகக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்:
தொடர்புடைய ஆன்மீகக் கட்டுரைகள்:
மேலும் சில முக்கிய பரிகாரத் தலங்கள்:
🔥 Mahashivratri2026
#Mahashivratri2026 #HarHarMahadev #OmNamahShivaya #MahaShivratri #சிவராத்திரி2026 #ShivaShakti #Jagran2026 #NishitaKaal #Bholenath #MahadevStatus #SpiritualAwakening #ShivaTandava #IshaMahashivratri #LordShiva #Sivarathiri #Peace #Meditation #SanatanDharma #ShivaBlessings #MahashivratriWishes #Spirituality #AdiYogi #Shivoham #HinduFestival #VratVidhi