டிசம்பர் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்
December 2026 Festivals, Rituals & Temple Guide
முக்கிய பண்டிகை
வைகுண்ட ஏகாதசி / ஆருத்ரா தரிசனம்
சுப முகூர்த்தங்கள்
05 நாட்கள்
📅 முக்கிய நாட்கள்
| தேதி | நாள் | விபரம் |
|---|---|---|
| 20-12-2026 | ஞாயிறு | வைகுண்ட ஏகாதசி |
| 24-12-2026 | வியாழன் | ஆருத்ரா தரிசனம் |
| 04-12-2026 | வெள்ளி | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 06-12-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 10-12-2026 | வியாழன் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 13-12-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 14-12-2026 | திங்கள் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
✨ டிசம்பர் மாத வழிபாட்டு முறைகள்
மார்கழி மாதம்: அதிகாலையில் நீராடி, வாசலில் வண்ணக் கோலமிட்டு, திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவது மனதிற்கு அமைதி தரும்.
- வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் 'சொர்க்கவாசல்' திறக்கப்படும் இந்நாளில் விரதமிருந்து இறைவனை தரிசிப்பது பிறவிப் பிணியை நீக்கும்.
- ஆருத்ரா தரிசனம்: நடராஜப் பெருமானின் திருவாதிரை திருநாளில் களி படைத்து வழிபடுவது விசேஷம்.
🕉️ டிசம்பர் மாத விசேஷ கோவில்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில்
வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக 21 நாட்கள் நடைபெறும். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் சொர்க்கவாசல் கடப்பது மகா புண்ணியம்.
ॐ
டிசம்பர் மாத கோவில் விசேஷங்கள்
| Date | விசேஷங்கள் |
|---|---|
| 01 | காலபைரவாஷ்டமி யோகிராம் சுரத்குமார் பிறந்த நாள் |
| 09 | மதுரை கூடலழகர் கஜேந்திரமோட்சம் |
| 10 | சகல விஷ்ணு ஆலயங்களில் பகல் பத்து உற்சவ ஆரம்பம் |
| 12 | ரம்பா திருதியை |
| 13 | சிரவண விரதம் |
| 14 | வரசதுர்த்தி விரதம் பத்ரி கெளரி விரதம் வினாயக பஞ்சமி |
| 15 | ஸ்ரீ சுப்ரமண்ய சஷ்டி ஸ்ரீ சம்பக சஷ்டி நகரத்தார் பிள்ளையார் நோன்பு |
| 16 | தனுர்மாத பூஜை ஆரம்பம் நந்த சப்தமி ஆழ்வார் திருநகர் கஜேந்திர மோட்சம் |
| 18 | பிரளய கல்பதி |
| 20 | ஸ்ரீரங்கம் நம் பெருமாள் முத்தங்கி சேவை ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களில் இராப்பத்து உற்சவ ஆரம்பம் |
| 23 | ஆருத்ரா அபிஷேகம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் சிதம்பரம் நடராஜ ரதோத்ஸவம் |
| 24 | தத்தாத்ரேய ஜெயந்தி ஆருத்ரா தரிசனம் |
| 25 | ஸ்ரீ ரமண பகவான் ஜெயந்தி |
| 29 | ஸ்ரீ பரசுராம ஜெயந்தி கல்ப்போட் ஆரம்பம் |