நவம்பர் 2026 - சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கம்
November 2026 Festivals, Rituals & Temple Guide
முக்கிய பண்டிகை
தீபாவளி / சூரசம்ஹாரம் / திருக்கார்த்திகை
சுப முகூர்த்தங்கள்
07 நாட்கள்
📅 முக்கிய நாட்கள்
| தேதி | நாள் | விபரம் |
|---|---|---|
| 08-11-2026 | ஞாயிறு | தீபாவளித் திருநாள் |
| 10-11-2026 | செவ்வாய் | கந்த ஷஷ்டி விரதம் துவக்கம் |
| 15-11-2026 | ஞாயிறு | சூரசம்ஹாரம் / சுப முகூர்த்தம் |
| 24-11-2026 | செவ்வாய் | திருக்கார்த்திகை தீபம் / பாஞ்சராத்திர தீபம் |
| 01-11-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
| 11-11-2026 | புதன் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 13-11-2026 | வெள்ளி | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 16-11-2026 | திங்கள் | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 20-11-2026 | வெள்ளி | சுப முகூர்த்தம் (வளர்பிறை) |
| 29-11-2026 | ஞாயிறு | சுப முகூர்த்தம் (தேய்பிறை) |
✨ நவம்பர் மாத வழிபாட்டு முறைகள்
தீபாவளி: அதிகாலையில் எண்ணெய் தேய்த்து நீராடி (கங்கா ஸ்நானம்), புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடும் மகிழ்ச்சியான திருநாள்.
- கந்த ஷஷ்டி: முருகப்பெருமானின் அருளைப் பெற ஆறு நாட்கள் விரதமிருந்து சூரசம்ஹாரத்தை தரிசிப்பது தீமைகளை அழிக்கும்.
- திருக்கார்த்திகை: வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி இருள் நீக்கி ஒளி பரப்பும் உன்னதமான வழிபாட்டு முறை.
🕉️ நவம்பர் மாத விசேஷ கோவில்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில்
நவம்பர் மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்றது. மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிப்பது பிறவிப் பயனைத் தரும்.
ॐ
நவம்பர் மாத கோவில் விசேஷங்கள்
| Date | விசேஷங்கள் |
|---|---|
| 03 | திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்மன் ரதோத்ஸவம் |
| 06 | யம தீபம் |
| 06, 07 | தன்வந்திரி ஜெயந்தி |
| 07 | திருமுருக கிருபானந்தவாரியார் நினைவு நாள் |
| 08 | தீபாவளி பண்டிகை லக்ஷ்மி குபேர பூஜை கேதார கௌரி விரதம் |
| 10 | கோவர்த்தன விரதம் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் |
| 11 | யம துவிதியை |
| 13 | நாக சதுர்த்தி, துர்வா கணபதி விரதம் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திரம் |
| 15 | கந்த சஷ்டி சூரஸம்ஹார விழா திருவண்ணாமலையார் உற்சவ ஆரம்பம் |
| 16 | சிரவண விரதம் திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கல்யாணம் |
| 17 | கோஷ்டாஷ்டமி முழுவக்கு நதிகளில் கடை முழுக்கு ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா விஷ்ணுபதி புண்ய காலம் |
| 18 | அக்ஷய நவமி |
| 21 | திருவண்ணாமலையார் ரதோத்ஸவம் சாதுர் மாத விரத பூர்த்தி |
| 23 | பரணி தீபம் புட்டப்பருத்தி சாய்பாபா தினம் |
| 24 | திருவண்ணாமலையார் தீபம் ஸர்வ ஆலய தீபம் ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம் குருநானக் ஜெயந்தி ஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி |
| 30 | சாவித்திரி கல்பதி |